search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பின்னணி பாடகர் வேல்முருகன் கைது
    X

    பின்னணி பாடகர் வேல்முருகன் கைது

    • போக்குவரத்தை தடை செய்ய வைக்கப்பட்டிருந்த பேரிகாடை நகர்த்திவிட்டு காரை வேல்முருகன் இயக்க முயன்றார்.
    • சம்பவம் குறித்து உதவி மேலாளர் வடிவேல் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தார்.

    சென்னை விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் ஆற்காடு சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு விருகம்பாக்கம் ஆற்காடு சாலை வேம்புலி அம்மன் கோவில் சிக்னல் அருகே பேரிகாட் போட்டு ஒருவழிப்பதையாக மாற்றப்பட்டது. அப்போது அவ்வழியாக பின்னணி பாடகர் வேல்முருகன் காரில் வந்தார். போக்குவரத்தை தடை செய்ய வைக்கப்பட்டிருந்த பேரிகாடை நகர்த்திவிட்டு காரை வேல்முருகன் இயக்க முயன்றார்.

    இதைப் பார்த்த மெட்ரோ ரயில் கட்டுப்பான நிறுவனத்தின் உதவி மேலாளர் வடிவேல், இந்த வழியில் பணிகள் நடப்பதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதனால் காரை ஓட்டி வந்த வேல்முருகனுக்கும், உதவி மேலாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வேல்முருகன், உதவி மேலாளரை ஆபாசமாக பேசி, சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் உதவி மேலாளரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் சம்பவம் குறித்து உதவி மேலாளர் வடிவேல் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தார்.

    இந்நிலையில் மெட்ரோல் ரெயில் நிர்வாக அதிகாரியை தாக்கிய வழக்கில் பாடகர் வேல் முருகன் கைது செய்யப்பட்டார். பாடகர் வேல்முருகன் மீது ஆபாசமாக பேசியது மற்றும் ஊழியரை தாக்கியது போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வேல்முருகன் ஜாமீனில் வந்ததது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×