search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டு குழு அறிவித்தது தமிழ் மாநில காங்கிரஸ்
    X

    பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டு குழு அறிவித்தது தமிழ் மாநில காங்கிரஸ்

    • தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
    • பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்த த.மா.கா-வின் தேர்தல் தொகுதி பங்கீட்டு குழு.

    பாராளமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

    அந்த வகையில் தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் இடையே நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, தமாகா கட்சி பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்தது.

    இந்நிலையில், த.மா.கா-வின் தேர்தல் தொகுதி பங்கீட்டு குழு அமைத்து அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ் மாநில காங்கிரஸ் 2024ம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

    எனவே, பாராளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கைகள் குறித்து பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்த த.மா.கா-வின் தேர்தல் தொகுதி பங்கீட்டு குழு அமைத்து அறிவித்துள்ளது.

    அதன்படி, தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவில், " முன்னாள் எம்.பி பி.ஆர்.எஸ் வெங்கடேசன், முன்னாள் எம்எல்ஏ விடியல் எஸ்.சேகர், பொதுச்செயலாளர் சக்திவடிவேல், முன்னாள் எம்எல்ஏ ரெங்கராஜன், பொதுச்செயலாளர் ஏ.எஸ்.முனவர் பாஷா, முன்னாள் எம்எல்ஏ கே.வி.ஆர்.ராம்பிரபு.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×