search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வியூகம்- கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை
    X

    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வியூகம்- கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை

    • 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • கிராமப்புறங்களில் கட்சியை வலுப்படுத்த செய்ய வேண்டிய பணிகள் பற்றி கமல்ஹாசன், நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் பாராளுமன்ற தேர்தலில் முதல் வெற்றியை பெற்று விடவேண்டும் என்கிற முனைப்பில் வியூகம் அமைத்து செயலாற்றி வருகிறார்.

    இதற்காக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் தொடர்ச்சியாக கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கடந்த மாதம் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்த அவர் கடந்த 4-ந்தேதி செயற்குழு உறுப்பினர்களுடன் ஆலோசித்தார்.

    இதன் தொடர்ச்சியாக சென்னை அண்ணாநகரில் இன்று மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    அங்குள்ள தனியார் ஓட்டலில் நடந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் 117 பேர் பங்கேற்றனர். செயற் குழுவை சேர்ந்த மாநில நிர்வாகிகள் 25 பேரும், நிர்வாக குழுவை சேர்ந்த 5 பேரும் கலந்து கொண்டனர்.

    துணை தலைவர்கள் மவுரியா, தங்கவேலு, செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், சிவ இளங்கோ, கவிஞர் சினேகன், முரளி அப்பாஸ், மூகாம்பிகை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    கிராமப்புறங்களில் கட்சியை வலுப்படுத்த செய்ய வேண்டிய பணிகள் பற்றி கமல்ஹாசன், நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

    Next Story
    ×