search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓணம் பண்டிகையையொட்டி ஆலங்குளத்தில் மல்லிகை பூ கிலோ ரூ.800-க்கு விற்பனை
    X

    ஓணம் பண்டிகையையொட்டி ஆலங்குளத்தில் மல்லிகை பூ கிலோ ரூ.800-க்கு விற்பனை

    • கெட்வெல் ஆஞ்சநேயர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை களைகட்டியுள்ளது.
    • இந்த ஆண்டும் நாளை மறுநாள் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி நாளை பூக்கள் விலை அதிகரிக்கும்.

    நெல்லை:

    கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இந்த நாளில் கேரளாவில் பெண்கள் தங்களது வீடு முன்பு வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்வார்கள். இதற்காக தமிழகத்தில் குமரி மாவட்டம் தோவாளை, நெல்லை சந்திப்பு, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலர் சந்தைகளில் இருந்து அதிகளவு பூக்கள் கேரளாவிற்கு ஏற்றுமதியாகும்.

    இந்நிலையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை தமிழகத்தில் கல்லூரிகளில் படிக்கும் கேரளா மாணவ-மாணவிகள், தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் என பலதரப்பட்டவர்களும் கொண்டாடுவார்கள்.

    இதனையொட்டி நெல்லை சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை களைகட்டியுள்ளது. இன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை ரூ.500 வரை விற்பனையானது.

    அதே விலையிலேயே பிச்சிப்பூ விற்பனையானது. அதேநேரத்தில் பூக்களை வாங்கி கொண்டு தெருக்களில் சென்று விற்கும் வியாபாரிகள் ரூ.600 வரை விற்றனர்.

    தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இன்று காலை ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.800-க்கு விற்பனையானது. பிச்சிப்பூ ரூ.600-க்கு விலை போனது. இதேபோல் சம்பங்கி மற்றும் ரோஜா பூக்கள் கிலோ தலா ரூ.200-க்கு விற்பனையானது.

    இதுகுறித்து நெல்லை சந்திப்பு பூக்கடை உரிமையாளர்கள் கூறுகையில், ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையின்போது பூக்கள் விலை அதிகரிக்கும். இந்த ஆண்டும் நாளை மறுநாள் பண்டிகை கொண்டாடப்படுவதை யொட்டி நாளை பூக்கள் விலை அதிகரிக்கும்.

    கடந்த 2 நாட்களாக சுபமுகூர்த்த தினம் என்பதால் மல்லிகை மற்றும் பிச்சி பூக்கள் விலை ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனையான நிலையில், இன்று ரூ.500 வரை விற்பனையாகி உள்ளது. நாளை அதன் விலை மேலும் அதிகரிக்கும் என்றார்.

    Next Story
    ×