என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பா.ஜ.க.வில் இணைந்த அன்பழகனுக்கு அண்ணாமலை பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
ஓ.பி.எஸ். ஆதரவாளரான முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் இணைந்தார்
- எனது பணியை பாராட்டி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எனக்கு எம்.எல்.ஏ. பதவி வழங்கினார்.
- குஜராத்தில் மகத்தான வெற்றி பெற்றதைப் போல தமிழகத்திலும் பா.ஜ.க. ஆட்சியை பிடித்து தாமரை மலரும். அதற்காக நான் பாடுபடுவேன் என்றார்.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் அன்பழகன். இவர் அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை பிரச்சினை தலைதூக்கிய நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில், அ.தி.மு.க.வில் நீண்ட காலமாக பணியாற்றி வந்தேன். எனது பணியை பாராட்டி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எனக்கு எம்.எல்.ஏ. பதவி வழங்கினார். அதன் பிறகு கட்சியிலும் பதவிகள் வழங்கப்பட்டது.
ஆனால் அதன் பிறகு தேன்மொழிக்கு மட்டும் 3 முறை சீட் வழங்கியுள்ளனர். எனக்கு முக்கியத்துவம் அளிக்காமல் புறக்கணித்து வந்தனர். இதனால் பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன். குஜராத்தில் மகத்தான வெற்றி பெற்றதைப் போல தமிழகத்திலும் பா.ஜ.க. ஆட்சியை பிடித்து தாமரை மலரும். அதற்காக நான் பாடுபடுவேன் என்றார்.






