என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பா.ஜ.க. தலைவர்களிடம் மீண்டும் நெருக்கம் ஏற்படுத்த ரஜினியிடம் உதவி கேட்ட ஓ.பி.எஸ்.
    X

    பா.ஜ.க. தலைவர்களிடம் மீண்டும் நெருக்கம் ஏற்படுத்த ரஜினியிடம் உதவி கேட்ட ஓ.பி.எஸ்.

    • பாரதிய ஜனதா கட்சியை நாங்கள் எதிர்ப்பது கிடையாது
    • பாரதிய ஜனதாவுக்கு எதிராக எங்கள் அரசியல் பயணம் இருக்காது.

    சென்னை:

    அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடந்தாண்டு ஜூலை மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தை அங்கீகரித்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி விட்டது. ஆனாலும் 'மெயின் வழக்கு' இன்னும் நிலுவையில் உள்ளது.

    இந்த தீர்ப்பு எப்போது வெளிவரும் என்று தெரியாத நிலையில், தன் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்க மாவட்டம்தோறும் சென்று பொதுக்கூட்டம் நடத்த உள்ள ஓ.பன்னீர்செல்வம், இதற்கு 'புரட்சி பயணம்' என்று பெயரிட்டுள்ளார்.

    இதன் துவக்கமாக இன்று காஞ்சிபுரம் அருகே கலியனூர் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினி வீட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றார். இருவரும் ஒரு மணி நேரம் தனியாக பேசினர்.

    இந்த சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்கள் யாரையும் உடன் அழைத்துச் செல்லவில்லை. இருவர் மட்டும் அமர்ந்து தற்போதைய அரசியல் சூழ்நிலை, லோக்சபா தேர்தல் உள்பட பல விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    பாரதிய ஜனதா தலைமை இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நடந்து வரும் சூழலில் தனித்து விடப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தனது நிலைப்பாட்டை விளக்குவதற்காக ரஜினியை சந்தித்து பேசி இருக்கிறார்.

    பாரதிய ஜனதா கட்சியை நாங்கள் எதிர்ப்பது கிடையாது. எடப்பாடியை தான் எதிர்க்கிறோம். அதற்கேற்ப எங்களது அரசியல் வியூகம் அமையும்.

    பாரதிய ஜனதா மேலிடத்தில் பேசி எங்கள் நிலைமையை புரிய வையுங்கள். நாங்கள் எப்போதும் மோடி, அமித்ஷாவுக்கு துணை நிற்போம். பாரதிய ஜனதாவுக்கு எதிராக எங்கள் அரசியல் பயணம் இருக்காது. இது பற்றி நீங்கள் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லுங்கள் என்று ரஜினியிடம் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    ரஜினிக்கு பாரதிய ஜனதா தலைவர்களுடன் நல்ல நட்பு உள்ளதால், அவர் வாயிலாக பாரதிய ஜனதா தலைமைக்கு தூது அனுப்பவே இந்த சந்திப்பு நடந்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×