search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது- அரசு புதிய கட்டுப்பாடு
    X

    காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது- அரசு புதிய கட்டுப்பாடு

    • ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்தாலும், பல பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை.
    • நடைமுறை மே மாதம் இறுதி வரை கடைபிடிக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்தாலும், பல பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை.

    இதனால் திறந்த வெளியில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் கடுமையாக சிரமப்படுகிறார்கள். இதை அறிந்த தமிழக அரசு கட்டுமான தொழிலாளர்களின் உடல்நலம் பாதிப்படைவதை தடுக்கும் பொருட்டு கட்டுமான நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    இது குறித்து சென்னை தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தற்போது நிலவி வரும் அதிக வெப்ப அலை காரணமாக தொழிலாளர்களின் உடல்நலம் பாதிப்படைவதை தடுக்கும் பொருட்டு, திறந்த வெளியில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமான பணிகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளக்கூடாது என கட்டுமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    இந்த நடைமுறை மே மாதம் இறுதி வரை கடைபிடிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×