search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்திய பொருளாதாரத்தை வடிவமைப்பதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கும்: மு.க.ஸ்டாலின்
    X

    இந்திய பொருளாதாரத்தை வடிவமைப்பதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கும்: மு.க.ஸ்டாலின்

    • கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலம், அதனால் சிறந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் உண்டு.
    • 2030க்குள் 1 ட்ரில்லியன் பொருளாதாரத்தை தமிழகம் எட்டும்.

    சென்னை:

    உலக முதலீட்டாளர் மாநாட்டை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்புரை ஆற்றினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய ஜவுளி, வர்த்தக தொழில்துறை மந்திரி பியூஷ்கோயலுக்கு ஜல்லிக்கட்டு காளை நினைவுப் பரிசை வழங்கினார். இதைத்தொடர்ந்து மத்திய மந்திரி பியூஷ் கோயல் உரையாற்றினார்.

    இதையடுத்து உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளதால், தற்போது கோட் சூட் அணிந்துள்ளேன்.

    * இன்று சென்னையில் பெய்யும் மழை போல முதலீடும் மழையாக பெய்யும் என நம்புகிறேன்.

    * முதலமைச்சராக மட்டுமின்றி சகோதரனாக உங்களை வரவேற்கிறேன்.

    * தனித்த தொழில்வளம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.

    * பழங்காலத்திலேயே கடல் தாண்டி வணிகம் செய்தவர்கள் தமிழர்கள்.

    * திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழி தமிழில் உண்டு.

    * கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலம், அதனால் சிறந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் உண்டு.

    * எங்கள் அழைப்பை ஏற்று வந்துள்ள அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் நன்றி. வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், தொழில் கூட்டமைப்பினருக்கு நன்றி.

    * எனது அழைப்பை ஏற்று வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு நன்றி. வங்கிப் பணியாளராக இருந்து நிதி, வர்த்தகத்துறையில் சிறந்து விளங்குபவர் பியூஸ் கோயல்.

    * அமெரிக்க உள்ளிட்ட 9 நாடுகள் எங்களுடன் பங்குதாரராக உள்ளன.

    * தொழில் வளர்ச்சிக்கு இந்த மாநாடு வழிவகுக்கும். பல சாதனைகளை மிஞ்சக்கூடிய மாநாடாக இது இருக்கும்.

    * இந்திய பொருளாதாரத்தை வடிவமைப்பதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கும்.

    * 2030க்குள் 1 ட்ரில்லியன் பொருளாதாரத்தை தமிழகம் எட்டும்.

    * பொருளாதார வளர்ச்சிக்கு சட்டம் ஒழுங்கு பேணப்பட்டு, அமைதி நிலவ வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும்.

    * 2021ல் பொறுப்பேற்ற பிறகு இந்த வசதிகளை சிறப்பாக மேம்படுத்தி வருகிறோம்.

    * திறமையான இளைஞர் சக்தியை உருவாக்குவதில் தமிழகம் உறுதியாக இருக்கிறது என்று கூறினார்.

    Next Story
    ×