search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
    • குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது.

    திருச்சி:

    டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சர் இன்று ஆய்வு செய்தார். திருச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தி.மு.க. அரசின் நடவடிக்கையால் டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிகள் அதிகரித்துள்ளது. காவிரி பாசன கால்வாய்கள் தூர்வாரப்பட்டு, கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    உழவுக்குத் தேவையான இடுபொருள், கடன் உதவிகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. நடப்பாண்டும் குறுவை, சம்பா சாகுபடி பரப்பளவை அதிகரிக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    4,703 கிலோமீட்டர் தூரம் பாசன கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது.

    உதய் திட்டமே மின் கட்டண உயர்வுக்கு காரணம். அதிமுக ஆட்சியில் கையெழுத்தான உதய் திட்டமே மின் கட்டண உயர்வுக்கு காரணம்

    மேகதாது அணை கட்ட விடமாட்டோம் என தெரிவித்தார்.

    Next Story
    ×