search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை- வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்
    X

    மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை- வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்

    • இந்த ஆண்டில் இதுவரை 198 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
    • மீன்பிடித் தொழிலை முழுமையாக நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது

    சென்னை:

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், 16-11-2022 அன்று இரவு தமிழக மீனவர்கள் 4 பேர் உள்பட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 198 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி சிறையில் அடைக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், சேதப்படுத்தப்படுவதும், மீன்பிடித் தொழிலை முழுமையாக நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது என்றும், இந்திய தரப்பில் இருந்து பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டபின்னரும் 100 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது இலங்கை வசம் உள்ளது என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளார்.

    தற்போது இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களின் மீன்பிடி படகினையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×