என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குழந்தைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஊட்டச்சத்துமிக்க உணவுகளை வழங்கியபோது எடுத்த படம்.
ராயபுரத்தில் ரூ.25 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்
- அங்கன்வாடி மையத்துக்கு வந்த குழந்தைகளுக்கு பழம், பிஸ்கட் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
- ஊட்டச்சத்து மிக்க உணவை சிறப்பாக வழங்கிட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
சென்னை:
சென்னை ராயபுரம் மண்டலம் 63-வது வார்டுக்கு உட்பட்ட கரீம் மொய்தீன் தெருவில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
பின்னர் அங்கன்வாடி மையத்துக்கு வந்த குழந்தைகளுக்கு பழம், பிஸ்கட் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், அங்கன்வாடி பணியாளர்களிடம் கலந்துரையாடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குழந்தைகளை நல்ல முறையில் கவனித்து கொள்ளவேண்டும் என்றும், ஊட்டச்சத்து மிக்க உணவை சிறப்பாக வழங்கிட வேண்டும் என்றும் அறிவுரைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகர மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






