என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்படும்- அன்பில் மகேஷ் பொய்யாமொழி
    X

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்படும்- அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    • ஒட்டப்பிடாரத்தில் வட்டார கல்வி அலுவலக கட்டிடம் கட்ட ஊரக வளர்ச்சி துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • நடப்பாண்டு கூடுதலாக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பள்ளி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின் போது ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம். சி.சண்முகையா ஒட்டப்பிடாரத்தில் வட்டார கல்வி அலுவலக கட்டிடம் கட்ட அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் வட்டார கல்வி அலுவலக கட்டிடம் கட்ட ஊரக வளர்ச்சி துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான வசதிகள் செய்யப்படும்.

    ரூ.7500 கோடியில் 16 ஆயிரம் புதிய வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதில் ரூ. 2,487 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள், பள்ளி சுற்றுச்சுவர், ஆய்வகங்கள் உள்பட 3603 வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    3,601 வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு கூடுதலாக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பள்ளி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×