என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கமல் கட்சியில் இருந்து தொழிலாளர் அணி செயலாளர் பொன்னுசாமி திடீர் விலகல்
- மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயல்வீரனாக, எனது மனச்சாட்சிக்கு விரோதமின்றி நான் செயல்பட்டு வந்தேன்.
- என்னை ஊக்குவித்து வந்த துணைத்தலைவரும், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான ஏ.ஜி.மவுரியா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து தொழிலாளர் அணி செயலாளர் பொன்னுசாமி விலகியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எனது செயல்பாடுகளை பார்த்து கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்சியின் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் பொறுப்பில் நியமனம் செய்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் செயல்வீரனாக, எனது மனச்சாட்சிக்கு விரோதமின்றி நான் செயல்பட்டு வந்ததை அனைவரும் நன்கறிவீர்கள்.
என்னை ஊக்குவித்து வந்த துணைத்தலைவரும், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான ஏ.ஜி.மவுரியா மற்றும் கட்சியின் ஏனைய நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், மய்ய உறவுகளுக்கும் இந்த நேரத்தில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story






