என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை

    • அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை இன்றும் நடைபெறுகிறது.
    • வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு புகாரிலும் இந்த சோதனை நடந்துவருகிறது.

    சென்னை:

    திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களின் அலுவலகங்கள், அமைச்சரின் முகாம் அலுவலகம், வீடு ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இன்று 3-வது நாளாக சோதனை நீடித்தது. அதிகாரிகள் பல்வேறு ஆவணங்கள் மற்றும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

    திருவண்ணாமலையில் திண்டிவனம் ரோட்டில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பன் வீடு, காண்ட்ராக்டர் வெங்கட் என்பவர் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நீடித்து வருகிறது.

    சோதனை நடந்து வரும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×