search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆஞ்சநேயர் சன்னதி முன்பு தேங்காயை பற்களால் உறித்து வழிபட்ட பக்தரால் பரபரப்பு
    X

    ஆஞ்சநேயர் போலவே பாவனை செய்து தேங்காயை பற்களால் உறித்து வழிபட்ட பக்தர்.

    ஆஞ்சநேயர் சன்னதி முன்பு தேங்காயை பற்களால் உறித்து வழிபட்ட பக்தரால் பரபரப்பு

    • பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட தேங்காய்களை தனது பற்களால் கடித்து உறித்தார்.
    • பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டதோடு தங்கள் செல்போன்களில் படம் பிடித்து அந்த வடமாநில இளைஞரை பயபக்தியுடன் வழிபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொங்கலூர் ஊராட்சிக்குட்பட்ட அலகுமலை கோவில் பிரசித்தி பெற்ற முருகர் தலமாக இருந்து வருகிறது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. கந்த சஷ்டி விழாவின் நான்காம் நாளான நேற்று காரிய சித்தி ஆஞ்சநேயர் சந்நிதி முன்பு வட மாநில இளைஞர் ஒருவர் தரிசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருள் ஏற்பட்ட நிலையில் ஆஞ்சநேயர் போலவே பாவனை செய்து ஆஞ்சநேயர் சிலையிடம் இந்தியில் பேசியவாறு பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட தேங்காய்களை தனது பற்களால் கடித்து உறித்தார்.

    அனுமன் போலவே பாவனை செய்து அவர் தேங்காய்களை பற்களால் உறித்ததை கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டதோடு தங்கள் செல்போன்களில் படம் பிடித்து அந்த வடமாநில இளைஞரை பயபக்தியுடன் வழிபட்டனர். சிறிது நேரத்திற்கு பின்பு அந்த இளைஞர் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு இயல்பு நிலைக்கு திரும்பினார். இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆஞ்சநேயர் போலவே பாவனை செய்து தேங்காயை பற்களால் உறித்து வழிபட்ட பக்தர்.

    Next Story
    ×