என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- மிச்சாங் புயல் காரணமாக சென்னை, தாம்பரம் மாநகராட்சி பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
- நாளைக்கும் மீட்புப்பணி முழுமையாக முடியவடைய வாய்ப்பு இல்லை.
மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் எல்லா இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய இரண்டு நாட்கள் நான்கு மாவட்டங்களிலும் பொது விடுமுறை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் தற்போது இந்த நான்கு மாவட்டங்களிலும் மழை நீர் வேகமாக வடிய வாய்ப்பில்லை. இதனால் நாளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Next Story






