என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நீலகிரியில்  3 நாட்கள் கனமழை எச்சரிக்கை- சென்னை வானிலை ஆய்வு மையம்
    X

    நீலகிரியில் 3 நாட்கள் கனமழை எச்சரிக்கை- சென்னை வானிலை ஆய்வு மையம்

    • நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
    • இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா தாலுகாக்களில் மழையின் தாக்கம் குறைந்த நிலையில் கூட லூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது.

    இந்நிலையில் நீலகிரிக்கு இன்று முதல் 3 நாட்ளுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

    கோவையில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் எனவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னையை பொருத்தவரை வெப்பநிலை பகல் நேரத்தில் சற்றே அதிகமாக காணப்படும்.

    மாலை நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×