என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை மற்றும் புறநகரில் வெளுத்து வாங்கும் கனமழை
- தெற்கு அந்தமான், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை (27 ந்தேதி) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
- நவம்பர் 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்பக்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில் தெற்கு அந்தமான், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை (27 ந்தேதி) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் எதிரொலியால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னை மற்றும புறநகர் பகுதிகளான சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, எம.ஆர்.சி நகர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர், தி.நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், சேலையூர், குரோம்பேட்டை, வேளச்சேரி, கந்தன்சாவடி, கிண்டி பல்லாவரம், கோயம்பேடு, மதுரவாயல், வானகரம், ராமாபுரம், போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.






