என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து- அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்
- வியாசர்பாடி ரெயில் நிலையத்தை நெருங்கியபோது என்ஜினில் தீப்பற்றியது.
- உயர் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட உரசல் காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 6 மணியளவில் மும்பைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது. இந்த சென்னை பேசின் பிரிட்ஜ் பாலத்தை கடந்து வியாசர்பாடி ரெயில் நிலையத்தை நெருங்கியபோது என்ஜினில் தீப்பற்றியது. இதனையடுத்து ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. என்ஜின் பகுதியில் இருந்து நெருப்புடன் கரும்புகை எழுந்ததால் பயணிகள் அனைவரும் அவசரம் அவசரமாக வெளியேறினர்.
விபத்து பற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. உயர் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட உரசல் காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story






