என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ரஜினிக்கு சிலை அமைத்து வழிபடும் ரசிகர்
    X

    ரஜினிக்கு சிலை அமைத்து வழிபடும் ரசிகர்

    • அறை முழுவதும் ரஜினி நடித்த அபூர்வ ராகங்கள் முதல் ஜெயிலர் படம் வரையிலான புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
    • சிலைக்கு யாகம் வளர்த்து கும்பாபிஷேகம் நடத்துவது போன்று பூஜைகள் செய்தார்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக். திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார். தீவிர ரஜினிகாந்த் ரசிகர். இவர் தனது அலுவலகத்தில் ஒரு அறையில் ரஜினி புகைப்படங்களை வைத்து வணங்கி வந்தார். இவரது பூஜை அறையில் கதவுகளில் ஸ்ரீ ரஜினி கோவில் என்று எழுதி தரிசன நேரம் காலை 6 முதல் மாலை 6 மணி வரை என்று குறிப்பிட்டுள்ளார்.

    அறை முழுவதும் ரஜினி நடித்த அபூர்வ ராகங்கள் முதல் ஜெயிலர் படம் வரையிலான புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ரஜினியின் படத்திற்கு அபிஷேகம், சிறப்பு பூஜை செய்தார்.

    இந்தநிலையில் 3 அடி உயரத்தில் ரஜினியின் கற்சிலையை வடிவமைத்து வாங்கி உள்ளார். இந்த சிலைக்கு யாகம் வளர்த்து கும்பாபிஷேகம் நடத்துவது போன்று பூஜைகள் செய்தார். பின்னர் சிலையை கோவிலாக வழிபடும் அந்த அறையில் வைத்து ரசிகரான கார்த்திக் பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 6 வகை பொருட்களால் அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து தீபாராதனை நடத்தினார். தனக்கு உறுதுணையாக பெற்றோரும், மனைவியும் இருப்பதாக அவர் கூறினார்.

    Next Story
    ×