என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க.வில் புதிய பதவி- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக கும்பகோணம் ரதிமீனா பி.எஸ்.சேகர் நியமனம்.
- அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக அரியலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ப.இளவழகன் நியமனம்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் (சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.) அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கழக புரட்சித் தலைவி பேரவை இணை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக கும்பகோணம் ரதிமீனா பி.எஸ்.சேகர், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக அரியலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ப.இளவழகன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story






