search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுற்றுலா தளங்களில் வாகனங்களை முறைப்படுத்தவே இ- பாஸ்: தமிழக அரசு
    X

    சுற்றுலா தளங்களில் வாகனங்களை முறைப்படுத்தவே இ- பாஸ்: தமிழக அரசு

    • இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
    • நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி அறிவிப்பு.

    திண்டுக்கல் மாவட்டம், நீலகிரி மாவட்டம், கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் கோடைகாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக அங்குள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதனை தவிர்க்கும் நோக்கில் கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் அமல்படுத்தியதை போன்றே இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவின் கீழ் மே 7 ஆம் தேதியில் இருந்து ஜூன் 30 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் கொடைக்கானல் வருவோர் இ பாஸ் பெறுவது கட்டாயமாகியுள்ளது.

    அதன்படி நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த இ-பாஸ் அறிவிப்பால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், இ-பாஸ் நடவடிக்கை வாகனங்களை முறைப்படுத்தவே நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது எனவும் இதனால், பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

    வெளி மாநில, வெளி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

    இ-பாஸ் அனுமதி காரணமாக பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

    Next Story
    ×