search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை... அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை: துரைமுருகன்
    X

    இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை... அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை: துரைமுருகன்

    • அவர்களுக்குரிய தண்ணீரை கேட்பதாக அங்குள்ள விவசாயிகள் தவறாக நினைக்கிறார்கள்
    • காவிரி ஆற்று நீர் கர்நாடகத்திற்கு மட்டுமல்ல

    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று கோட்டூர்புரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உச்சநீதிமன்றம் தீர்ப்பால் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நீரை வைத்துக் கொண்டு குறுவை பாசனத்தை பழுது இல்லாமல் காப்பற்றலாம் என கருதுகிறோம்.

    தண்ணீர் திறந்து விட்டதும் தமிழகம் வந்துவிடாது. பிலிகுண்டுலு வருவதற்கு மூன்று நாட்கள் ஆகும். இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பிற்கு ஆளாகும். அந்த நிலைக்கு போகமாட்டார்கள்.

    அவர்களுக்குரிய தண்ணீரை கேட்பதாக அங்குள்ள விவசாயிகள் தவறாக நினைக்கிறார்கள். காவிரி ஆற்று நீர் கர்நாடகத்திற்கு மட்டுமல்ல. கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகி, அந்த மாநிலத்தைவிட தமிழகத்தில்தான் அதிக இடங்களில் ஓடுகிறது. ஆற்றின் கடைமடை பகுதிக்குத்தான் அதிக உரிமை உண்டு. ஆகவே, கர்நாடகத்தில் உள்ள விவசாயிகளுக்கும் தண்ணீர் வேண்டும் என்பதை நான் மறுக்கவில்லை. தண்ணீர் மிகையாக இருக்கும் காலத்தில் இந்த பிரச்சினை இல்லை. கண்ணை மூடி திறந்து விடுவார்கள்.

    தற்போதைய நிலையில் எவ்வளவு தண்ணீர் இருந்தாலும், தமிழகத்திற்கு பங்கிட்டு கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அருமையாக தெரிவித்து இருக்கிறது.

    மொத்த நீரையும் திறந்து விட கேட்கவில்லை. எங்களுக்குரிய தண்ணீரை திறந்து விட கேட்கிறோம். பேச்சுவார்த்தை என்பது இனிமேல் இல்லை. பேச்சுவார்தைக்கு போனால் நமது கோரிக்கைகளை மழுங்கடித்து விடுவார்கள். இனிமேல் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை.

    Next Story
    ×