search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொடர்ந்து மழை: சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    தொடர்ந்து மழை: சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் சாரல் மழையாக நீடிக்கிறது.
    • திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

    திருவள்ளூர்:

    வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடலோரப்பகுதியை ஒட்டிய கடல்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் சாரல் மழையாக நீடிக்கிறது. நேற்று மதியம் கனமழையாக சில இடங்களில் கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. ஏற்கனவே மழைநீர் கால்வாய், மெட்ரோ ரெயில் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கின. குண்டும் குழியுமான சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சில இடங்களில் விட்டு விட்டு கன மழையாக கொட்டித்தீர்த்தது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.

    தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகளுக்கு தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் சில இடங்களில் பலத்த மழை கொட்டுவதால் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. இதில் தற்போது 2137மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு146 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. குடிநீர் தேவைக்காக 192 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645மி.கனஅடி. இதில் 2375மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 302 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 163 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் தற்போது 2075 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் மற்றும் மழை நீர் சேர்ந்து 270 கனஅடி தண்ணீர் வருகிறது. 405 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500மி.கனஅடியில் 370மி.கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. ஏரிக்கு 5 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது.

    திருவள்ளூரில் அதிகபட்சமாக 15 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதே போல் ஊத்துக்கோட்டையில் 13 மி.மீட்டர், கும்மிடிப்பூண்டியில் 10 மி.மீட்டர் மழை பெய்து உள்ளது. பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, பொன்னேரி, பூந்தமல்லி, திருத்தணி, ஆவடி உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் தொடர்ந்து சாரல் மழையாக நீடிக்கிறது.

    Next Story
    ×