என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    5 தேர்தல் வாக்குறுதிகள்: தமிழக மகளிர் காங்கிரஸ் விளக்கம்
    X

    5 தேர்தல் வாக்குறுதிகள்: தமிழக மகளிர் காங்கிரஸ் விளக்கம்

    • மகாலட்சுமி உத்தரவாதம் என்ற திட்டம் ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.
    • பெண்களின் நண்பன் என்னும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. குறிப்பாக பெண்களை கவரும் வகையில் சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

    காங்கிரஸ் அறிவித்துள்ள வாக்குறுதிகள் பெண்களை கவரும் வகையில் இருப்பதால் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறது.

    காங்கிரஸ் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதி குறித்து தமிழக மகளிர் காங்கிரஸ் விரிவான விளக்கம் அளித்தது.

    மகாலட்சுமி உத்தரவாதம் என்ற திட்டம் ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.

    பெண்களுக்கான சம உரிமை திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய நியமனங்களில் பெண்களுக்கு சம உரிமை கிடைக்கும்.

    பெண்களுக்கு உரிய மரியாதையுடன் அதிகாரம் அளிக்கும் வகையில் அங்கன்வாடி, ஆஷா மற்றும் மதிய உணவு பணியாளர்களின் மாத சம்பளத்தில் மத்திய அரசின் பங்களிப்பு இரட்டிப்பாக்கப்படும்.

    பெண்களின் நண்பன் என்னும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

    இதன்படி பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேவையான உதவிகளை வழங்கவும் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் அதிகார மையம் வடிவில் சட்ட உதவியாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.

    சாவித்திரி பாய் பூலே விடுதி திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பணிபுரியும் பெண்களுக்காக குறைந்தபட்சம் ஒரு விடுதி உருவாக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பான திட்டங்களை கொண்டு வருவதாக காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

    Next Story
    ×