என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    புதிதாக கட்டப்பட்டுள்ள துவக்கப்பள்ளியை திறந்து வைத்தார் முதலமைச்சர்
    X

    புதிதாக கட்டப்பட்டுள்ள துவக்கப்பள்ளியை திறந்து வைத்தார் முதலமைச்சர்

    • கட்டுமான பணியின் நிலை குறித்து பொறியாளரிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
    • கொளத்தூர் பகுதியில் புதிதாக கட்டப்படும் வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

    சென்னை:

    சென்னை கொளத்தூரில் ஜிகேஎம் காலனியில் நடைபெற்று வரும் சமுதாய நலக்கூட கட்டுமான பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டுமான பணியின் நிலை குறித்து பொறியாளரிடம் அவர் கேட்டறிந்தார்.

    கொளத்தூர் ஜிகேஎம் காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்கப்பள்ளியை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

    கொளத்தூர் பகுதியில் புதிதாக கட்டப்படும் வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

    இதையடுத்து மதுரை சாமி மடத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட உடற்பயிற்சி கூடத்தையும் அவர் திறந்து வைத்தார்.

    பேப்பர் மில்ஸ் சாலையில் வருவாய் துறையின் இடத்தில் புதிதாக அமையும் வட்டாட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் பார்வையிட்டார்.

    Next Story
    ×