என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்டிரல்-பட்டாபிராம் இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
    X

    சென்டிரல்-பட்டாபிராம் இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    • பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • எம்.ஜி.ஆர். சென்டிரல் - அரக்கோணம் இடையே காலை 5.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.

    பட்டாபிராம்

    * சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 10.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று (சனிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    * எம்.ஜி.ஆர்.சென்டிரல் - ஆவடி இடையே இரவு 11.30 மற்றும் 11.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    * பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்

    * எம்.ஜி.ஆர்.சென்டிரல் - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே காலை 4.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    * எம்.ஜி.ஆர். சென்டிரல் - திருவள்ளூர் இடையே காலை 4.30 மற்றும் 5.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    * எம்.ஜி.ஆர். சென்டிரல் - அரக்கோணம் இடையே காலை 5.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    * ஆவடி - எம்.ஜி.ஆர். சென்டிரல் இடையே காலை 3.50 மற்றும் 4 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    * பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - எம்.ஜி.ஆர்.சென்டிரல் இடையே காலை 3.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    * திருவள்ளூர் - எம்.ஜி.ஆர். சென்டிரல் இடையே காலை 3.50 மற்றும் 4.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    * அரக்கோணம் - எம்.ஜி.ஆர். சென்டிரல் இடையே காலை 3.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பகுதி நேரம் ரத்து

    * அரக்கோணம் - எம்.ஜி.ஆர். சென்டிரல் இடையே இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் ஆவடி மற்றும் எம்.ஜி.ஆர். சென்டிரல் இடையே இன்று பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    * பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - எம்.ஜீ.ஆர்.சென்டிரல் இடையே இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் ஆவடி மற்றும் எம்.ஜி.ஆர். சென்டிரல் இடையே இன்று பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    * திருத்தணி - எம்.ஜி.ஆர். சென்டிரல் இடையே இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் ஆவடி மற்றும் எம்.ஜி.ஆர். சென்டிரல் இடையே இன்று பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    * எம்.ஜி.ஆர். சென்டிரல் - திருத்தணி இடையே காலை 3.50 மற்றும் 5 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் எம்.ஜி.ஆர். சென்டிரல் மற்றும் ஆவடி இடையே நாளை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×