என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காவிரி நீர் விவகாரம்- சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
- காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
- தனித்தீர்மானம் மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை தொடங்கியது.
தமிழக சட்டசபையில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
இதைதொடர்ந்து, காவிரி நீர் விவகாரம் தொடர்பான தனித்தீர்மானம் மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், காவிரி நீர் விவகாரம் தொடர்பான தனித்தீர்மானம் சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தீர்மானத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படுகிறது.
Next Story






