என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இ.சி.ஆரில் கார்மோதி வேன் கவிழ்ந்து  கைக்குழந்தை பலி- 3பேர் உயிர் தப்பினர்
    X

    இ.சி.ஆரில் கார்மோதி வேன் கவிழ்ந்து கைக்குழந்தை பலி- 3பேர் உயிர் தப்பினர்

    • சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி வந்த கார் ஒன்று வேன் மீதி மோதியது.
    • விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் சரவணன் இவர் நேற்று மதியம் தனது மனைவி ஜெயஸ்ரீ மற்றும் பிறந்து 45 நாட்களே ஆன கைக்குழந்தை மகன் ஹிதேஷ், மாமனார் விஜயன் ஆகியோருடன் மாருதி ஆம்னி வேனில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று விட்டு, கோவளம் செல்வதற்காத சாலையை கடந்தனர்.

    அப்போது சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி வந்த கார் ஒன்று வேன் மீதி மோதியது. இதில் கார் தலைகுப்பர கவிழ்ந்து காரில் தாயின் மடியில் இருந்த கைக்குழந்தை வெளியே விழுந்து தலையில் அடிபட்டது.

    காரை ஓட்டிவந்த விஜயன் உட்பட காரில் பயணித்த அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அனைவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். குழந்தை மட்டும் மயக்க நிலையிலேயே இருந்ததால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கைக்குழந்தை உயிரிழந்தது. விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×