என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பூத்துக்கு ஒரு பிள்ளையார்...! பா.ஜனதாவின் அடுத்த அதிரடி
    X

    பூத்துக்கு ஒரு "பிள்ளையார்...!" பா.ஜனதாவின் அடுத்த அதிரடி

    • கட்சியில் ஆதரவை பெருக்க பாத யாத்திரை என்று அதிரடி திட்டங்களுடன் களம் இறங்கி இருக்கிறார்கள்.
    • தொய்வை சீராக்க விநாயகர் சதுர்த்தியை மையமாக வைத்து அடுத்த அதிரடியை பா.ஜனதா செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

    பா.ஜனதாவின் அடித்தளம் இந்துத்துவா. அந்த உணர்வு குறைந்துவிடாதபடிதான் இயக்கத்தின் பயணம் இருக்க வேண்டும் என்று அமைப்பு ரீதியாக அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    தற்போது தேர்தல் பிரசாரத்துக்கான பிள்ளையார் சுழியை அண்ணாமலை போட்டுள்ளார். ஆளுங்கட்சி மீதான புகார்களை பகிரங்கப்படுத்துவது. கட்சியில் ஆதரவை பெருக்க பாத யாத்திரை என்று அதிரடி திட்டங்களுடன் களம் இறங்கி இருக்கிறார்கள். இருப்பினும் ஆன்மீக உணர்வை வளர்ப்பதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காததால் பலர் ஒதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த தொய்வை சீராக்க விநாயகர் சதுர்த்தியை மையமாக வைத்து அடுத்த அதிரடியை பா.ஜனதா செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

    அதாவது அனைத்து பூத்களிலும் விநாயகர் சிலை பிரதிஷ்டை, வழிபாடு அதன் மூலம் இளைஞர்கள், பெண்கள் மத்தியில் ஆன்மிகத்துக்கு முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுக்க ஆலோசித்து வருகிறார்கள்.

    அண்ணாமலையின் முதற்கட்ட பாத யாத்திரை வருகிற 22-ந் தேதி முடிகிறது. அதன் பிறகு இந்த திட்டத்தை செயல்படுத்துவது பற்றி கட்சியின் உயர்மட்டக்குழு முடிவு செய்து அறிவிப்பு வெளியாகலாம் என்று ஏ.என்.எஸ்.பிரசாத் கூறினார்.

    Next Story
    ×