search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. நாளை ஆலோசனை: 65 ஆயிரம் பூத் கமிட்டி பெயர் பட்டியல் ஆய்வு
    X

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. நாளை ஆலோசனை: 65 ஆயிரம் பூத் கமிட்டி பெயர் பட்டியல் ஆய்வு

    • ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தல் களத்தில் அடிப்படை பூத் கமிட்டி.
    • நாளை நடைபெறும் கூட்டத்தில் 83 மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் என 166 பேர் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.

    ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தல் களத்தில் அடிப்படை பூத் கமிட்டி. இந்த பூத் கமிட்டிகளை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்று ஏற்கனவே மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

    தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 65 ஆயிரம் பூத்கள் உள்ளன. ஒவ்வொரு பூத்திலும் 800 முதல் 1000 ஓட்டுகள்தான் இருக்கும்.

    இந்த பூத்துகள் ஒவ்வொன்றுக்கும் 20 ஆண்கள் கொண்ட ஒரு கமிட்டி, 20 பெண்கள் கொண்ட ஒரு கமிட்டி, 25 பேர் கொண்ட இளைஞர்கள், இளம்பெண்கள் கமிட்டியை உருவாக்க வேண்டும்.

    ஒவ்வொரு கமிட்டிக்கும் தனித்தனி பதிவேடு இருக்க வேண்டும். அந்த பதிவேட்டில் கமிட்டியில் இடம் பெற்றுள்ள 20 பேரின் பெயர், முகவரி, ஆதார் எண், மொபைல் எண்ணை குறிப்பிட்டு புகைப்படமும் ஒட்டியிருக்க வேண்டும்.

    ஒவ்வொரு பூத்திலும் இந்த கமிட்டிகள் பற்றிய முழு விவரத்தையும் பென் டிரைவில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.

    கமிட்டியில் இடம் பெறுபவர்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது. பல குடும்பங்களை சேர்ந்தவர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

    இதை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருப்பவர்கள் சரி பார்க்க வேண்டும்.

    நாளை நடைபெறும் கூட்டத்தில் 83 மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் என 166 பேர் கலந்து கொள்கிறார்கள்.

    அவர்களிடம் பூத் கமிட்டி பட்டியல், பென்டிரைவ் ஆகியவை சேகரிக்கப்படுகிறது. அந்த பென்டிரைவ்கள் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் அதை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வார்கள்.

    அந்த பணிகள் நிறைவடைந்ததும் அதை சரி பார்க்க மாவட்டம் வாரியாக ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்படுவார். அவர்கள் தலைமை கழகத்தில் வழங்கப்பட்ட பட்டியல்படி சரியாக இருக்கிறதா? என்று நேரடியாக சென்று சரி பார்க்க வேண்டும்.

    அங்கொன்றும் இங்கொன்றுமாக பூத் கமிட்டியினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எடப்பாடி பழனிசாமியும் உண்மை தன்மையை கண்டறிய திட்டமிட்டுள்ளார்.

    பூத் கமிட்டியை வைத்து எடப்பாடி பழனிசாமி வகுக்கும் வியூகம் பற்றி கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:-

    ஒரு பூத்துக்கு 800 முதல் 1000 ஓட்டுகள்தான் இருக்கும். அதில் பதிவாவது அதிகபட்சமாக 400 முதல் 700 ஓட்டுகளாகத்தான் இருக்கும்.

    அ.தி.மு.க. பூத் கமிட்டியில் 65 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். அவர்கள் பரவலாக அனைத்து குடும்பங்களையும் சேர்ந்தவர்களாக இருப்பதால் ஒரு குடும்பத்துக்கு சராசரியாக 4 ஓட்டுகள் வீதம் 260 ஓட்டுகள் உறுதி.

    இது தவிர ஒவ்வொரு நிர்வாகியும் 20 பேர் வீட்டில் தொடர்பு வைத்து ஆதரவு திரட்ட வேண்டும். இவற்றின் மூலம் 350 முதல் 400 ஓட்டுகளை அறுவடை செய்ய முடியும் என்று திட்டமிட்டுள்ளார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×