search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரை ரிங் ரோட்டில் 5 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்த வாகனங்கள்
    X

    மதுரை ரிங் ரோட்டில் 5 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்த வாகனங்கள்

    • மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலத்தில் இருந்து இன்று காலையில் ஏராளமான தொண்டர்கள் ஆயிரக்கணக்கான வாகனங்களில் புறப்பட்டு வந்தனர்.
    • மாநாட்டு திடல் அருகே 300 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு மாநாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    மதுரை:

    மதுரை ரிங்ரோடு வலையங்குளம் பகுதியில் பிரமாண்டமாக நடந்த அ.தி.மு.க. பொன்விழா மாநாட்டிற்கு அதிகாலையில் இருந்து தொடர்ச்சியாக வாகனங்கள் வந்து கொண்டே இருந்தன.

    மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலத்தில் இருந்து இன்று காலையில் ஏராளமான தொண்டர்கள் ஆயிரக்கணக்கான வாகனங்களில் புறப்பட்டு வந்தனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாநாட்டு பந்தலில் அமர குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததால், அந்த நேரத்திற்கு தகுந்தவாறும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சை கேட்க வேண்டும் என்பதாலும் காலையில் ஏராளமான தொண்டர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தனர். இதனால் ரிங் ரோடு திருமங்கலம் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    கம்பம், தேனி, கோவை, கிருஷ்aணகிரி, சேலம், நாகர்கோவில், நெல்லை, சங்கரன்கோவில், ராஜபாளையம் போன்ற ஊர்களில் இருந்து வந்த வாகனங்கள் ஒரே நேரத்தில் திருமங்கலம், மாட்டுத்தாவணி ரிங் ரோட்டில் அணிவகுத்து சென்றன. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

    தொடர்ந்து வாகனங்கள் வந்துகொண்டே இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில நிமிடங்களுக்கு வாகனங்கள் நின்று, நின்று சென்றன. வாகனங்களின் அணிவகுப்பை பார்த்து உற்சாகம் அடைந்த தொண்டர்கள் பல்வேறு இடங்களில் வாகனங்களில் இருந்து இறங்கி நின்று செல்பி எடுத்தும், ரீல்ஸ் செய்தும் மகிழ்ந்தனர்.

    மாநாட்டு திடல் அருகே 300 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு மாநாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இருப்பினும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இன்றும் ஒரே நேரத்தில் அணிவகுத்து வந்ததால் வாகனங்களை காத்திருந்து நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ரிங் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    Next Story
    ×