என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    புதுச்சேரி துணைநிலை ஆளுநரை சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி
    X

    புதுச்சேரி துணைநிலை ஆளுநரை சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி

    • நடிகர் விஜய் சேதுபதி மிஷ்கினின் 'ட்ரைன்' படத்திலும், பாண்டிராஜின் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
    • படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி சென்ற நடிகர் விஜய் சேதுபதி, ஆளுநர் கைலாசநாதனை சந்தித்தார்.

    புதுச்சேரி:

    இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான 'மகாராஜா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    இந்த திரைப்படம் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி, மிஷ்கின் இயக்கத்தில் 'ட்ரைன்' படத்திலும், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில், புதுச்சேரியில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்ற நடிகர் விஜய் சேதுபதி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.

    மரியாதை நிமித்தமாக ஆளுநர் கைலாசநாதனை சந்தித்த விஜய் சேதுபதி அவருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

    அதேபோல், நடிகர் விஜய் சேதுபதிக்கு, ஆளுநர் கைலாசநாதன் சால்வை அணிவித்தார். இவர்கள் இருவரும் சுமார் அரை மணி நேரம் உரையாடினார்.

    Next Story
    ×