என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

40 கிலோ எடையில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி நடந்த காட்சி.
உலர் பழங்களுடன், மது கலந்து 40 கிலோ எடையில் தயாராகும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேக்
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
- கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன் கிறிஸ்துமஸ் கேக்காக தயாரிக்கப்படும்.
புதுச்சேரி:
புதுவை பூரணாங்குப்பத்தில் உள்ள தனியார் பீச் ரிசார்ட் ஓட்டலில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேக் செய்யும் திருவிழா நடந்தது.
40 கிலோ அளவில் முந்திரி, திராட்சை, பாதாம் மற்றும் பல்வேறு உலர் பழங்கள், ஒயின் வகைகள் மற்றும் வெளிநாட்டு உயர் ரக மதுபானங்களை கொண்டு கலவையாக கேக் தயாரிக்க ஊற வைக்கப்பட்டது.
இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார். ரிசார்ட் நிர்வாகிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
ஊறவைத்த கலவை 40 நாட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன் கிறிஸ்துமஸ் கேக்காக தயாரிக்கப்படும்.
அந்த கேக் வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு வரை பரிமாறப்பட உள்ளது.
Next Story






