search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் 3 லட்சம் புதிய உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்க்க ஏற்பாடு- தா.மோ.அன்பரசன் தகவல்
    X

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் 3 லட்சம் புதிய உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்க்க ஏற்பாடு- தா.மோ.அன்பரசன் தகவல்

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை இல்ல விழாவாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    • உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சியை நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 3-ந்தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

    சென்னை:

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் குன்றத்தூரில் நடைபெற்றது. தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. சிறப்புரையாற்றினார். மாவட்டக் கழக துணைச் செயலாளர்கள் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., து.மூர்த்தி, விசுவநாதன் முன்னிலை வகித்தனர்.

    அனைவரையும் மாவட்டக் கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வரவேற்று பேசினார். பின்னர் கூட்டத்தில் தீர்மானங்களை விளக்கி அவர் பேசியதாவது:-

    தமிழக அரசின் நிர்வாக வரலாற்றில் பொற்கால ஆட்சியை தந்து விண்முட்டும் சாதனைகளால் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்று, கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்களின் வாழ்வில் ஒளி விளக்கேற்றி சரித்திரம் படைத்த மறைந்தும், மறையாமல், தமிழக மக்களின் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் கருணாநிதி, இந்திய அரசியல் வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற அவரது நூற்றாண்டு விழா வரும் ஜூன் 3-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த விழாவை வருகிற ஜூன் 3-ந்தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் 3-ந்தேதி வரை ஓராண்டு காலம் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதும் தொண்டர்களின் இல்லவிழாவாக கோலாகலமாக கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க.வில் 1 கோடி உறுப்பினர்கள் உள்ள நிலையில் மேலும் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சியை நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 3-ந்தேதி தொடங்கி வைக்க உள்ளார். அதன்படி நமது மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், திருப்பெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போருர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில், தொகுதிக்கு 50 ஆயிரம் என மொத்தம் 3 லட்சம் புதிய உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்த்திடும் பணியில் அனைவரும் முனைப்புடன் செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டது.

    மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் அடங்கியுள்ள 2,374 வாக்குச்சாவடிகளுக்கும் 100 வாக்காளர்களுக்கு ஒரு தேர்தல் பணிக்குழு உறுப்பினர் என தேர்தல் மணிக்குழுவை அமைத்து பூர்த்தி செய்யப்பட்ட அப்படிவங்களை வருகிற ஏப்ரல் 5-ந்தேதிக்குள் வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார்.

    Next Story
    ×