search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கேரளாவில் வைரஸ் தாக்கி 3 யானைகள் பலி- உடுமலை வனப்பகுதியில் கண்காணிக்கும் அதிகாரிகள்
    X

    கேரளாவில் வைரஸ் தாக்கி 3 யானைகள் பலி- உடுமலை வனப்பகுதியில் கண்காணிக்கும் அதிகாரிகள்

    • ஹெர்பீஸ் என்ற வைரஸ் தாக்கி யானைக்குட்டிகள் உயிரிழந்தது ஆய்வில் தெரியவந்தது.
    • முதலில் யானை குட்டியின் தோல் மற்றும் சுவாசக்குழாயில் பாதிப்பு ஏற்படுத்தும் இந்த வைரஸ், பின்னர் தீவிரமடைந்து 24 மணி நேரத்துக்குள் உயிரிழப்பை ஏற்படுத்தும்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி வனப்பகுதியில் கேரள மாநிலத்தின் எல்லையான செம்பக்காடு, மறையூர், மூணார் வனப்பகுதி உள்ளது. இந்நிலையில் கேரள மாநிலம் மூணாறு குண்டல எஸ்டேட் பகுதியில் அம்மாநில வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது 3 யானைக்குட்டிகள் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் உயிரிழந்த யானைக்குட்டிகளின் உடல்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் ஹெர்பீஸ் என்ற வைரஸ் தாக்கி யானைக்குட்டிகள் உயிரிழந்தது ஆய்வில் தெரியவந்தது. இந்த ஹெர்பீஸ் நோய் தொற்றானது 1990 ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட தொற்று நோய் என கண்டறியப்பட்டது.

    முதலில் யானையின் தோல் மற்றும் சுவாசக்குழாயில் பாதிப்பு ஏற்படுத்தும் இந்த வைரஸ், பின்னர் தீவிரமடைந்து 24 மணி நேரத்துக்குள் உயிரிழப்பை ஏற்படுத்தும். இந்த வைரஸ் தொற்றால் ஒரே வாரத்தில் 3 ஆண் குட்டியானைகள் உயிரிழந்தது கேரள வனத்துறை மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை வனப்பகுதி யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீரை தேடி சுழற்சி முறையில் இடம் பெயர்ந்து வேறு இடங்களுக்கு செல்வது வழக்கம். உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகம் கேரள வனப்பகுதியான செம்பக்காடு, மறையூர், மூணார் பகுதியை ஒட்டி உள்ளதால் யானைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய உடுமலை வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் கணேஷ் ராம் தலைமையில் வனத்துறை அதிகாரிகள், வேட்டை தடுப்பு காவலர்கள் உடுமலை தமிழக-கேரள வனப்பகுதியில் யானைகளின் நட மாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×