search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ராதாகிருஷ்ணன்
    X
    ராதாகிருஷ்ணன்

    செங்கல்பட்டில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பூசி மையத்தில் விரைவில் உற்பத்தி தொடங்கப்படும்- ராதாகிருஷ்ணன் தகவல்

    செங்கல்பட்டில் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மத்திய அரசின் தடுப்பூசி மையம் திறக்க தயாராக உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த கிருஷ்ணன் காரணை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டில் இந்திய மருந்து விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பின் 13-வது மாநில மாநாடு நடைபெற்றது.

    இதில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மாநாட்டு மலரை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:- எலிக்காய்ச்சல், தக்காளி காய்ச்சல், குரங்கம்மை குறித்து மக்கள் பயப்பட வேண்டாம்.

    செங்கல்பட்டில் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மத்திய அரசின் தடுப்பூசி மையம் திறக்க தயாராக உள்ளது. அதில் விரைவில் உற்பத்தியை தொடங்க, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். விரைவில் அங்கு உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×