என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஊட்டியில் மகிழ்ச்சியாக படகு பயணம் மேற்கொண்ட சுற்றுலா பயணிகள்.
    X
    ஊட்டியில் மகிழ்ச்சியாக படகு பயணம் மேற்கொண்ட சுற்றுலா பயணிகள்.

    ரம்ஜான் விடுமுறை- ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஆண்டுதோறும் கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்குடன் கோடையை கழித்த மக்கள் இம்முறை எந்த கட்டுப்பாடும் இன்றி ஊட்டிக்கு படையெடுக்க தொடங்கி இருக்கின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான ஊட்டிஅரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    கடந்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் மற்றும் இன்று ரம்ஜான் பண்டிகையை யொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் ஊட்டியில் அலைமோதுகிறது. ஊட்டியில் உள்ள படகு இல்லத்தில் பயணம் மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். மிதவை படகு, துடுப்பு படகு, எந்திரப் படகு உள்ளிட்ட படகுகளில் சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் உற்சாகமாக பயணம் செய்து மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.



    Next Story
    ×