என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திற்பரப்பு அருவி
நாகர்கோவிலில் 5 மணி நேரம் இடைவிடாது கொட்டிய கனமழை- அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கொட்டித் தீர்த்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த 2 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று காலையில் வழக்கம்போல் வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்திற்குப் பிறகு சீதோஷண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. நாகர்கோவில், சுசீந்திரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மாலையில் மழை பெய்தது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்துகொண்டிருந்தது.
நாகர்கோவிலில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 5 மணி நேரம் இடை விடாமல் கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, மீனாட்சி புரம் சாலை, அசம்புரோடு பகுதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஆறாக ஓடியது. இடலாக்குடி பகுதியில் சாக்கடை நீருடன் மழைநீர் கலந்து ஓடியதால் சாலைகள் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. கோட்டார் சாலையும் மழையின் காரணமாக சேறும் சகதியுமாக மாறி உள்ளது.
இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். மாம்பழத்துறையாறு, ஆணைகிடங்கு, முள்ளங்கினாவிளை, கோழிப்போர் விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது.
மாம்பழத்துறையாறில் அதிகபட்சமாக 79 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருவதையடுத்து அங்கு மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.
தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம் பகுதிகளிலும் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கொட்டித் தீர்த்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
இதையடுத்து அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 39.80 அடியாக இருந்தது. அணைக்கு 314 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.05 அடியாக உள்ளது. அணைக்கு 207 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
சிற்றார்-1 அணை நீர்மட்டம் 9.45 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 9.54 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 19.10 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 8.37 அடியாகவும் உள்ளது. மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 27.2, பெருஞ்சாணி 9.2, சிற்றாறு-1-4, சிற்றாறு-2-3.5, மாம்பழத்துறையாறு 79, நாகர்கோவில் 72.4, பூதப்பாண்டி 35.2, சுருளோடு 28.4, கன்னிமார் 28.2, ஆரல்வாய்மொழி 20, பாலமோர் 17.4, மயிலாடி 42.2, கொட்டாரம் 15.2, நிலப்பாறை 15.6, இரணியல் 12.4, ஆணைக்கிடங்கு 77.2, குருந்தன்கோடு 21.2, அடையாமடை 32, கோழிப்போர்விளை 67, புத்தன் அணை 10.4, திற்பரப்பு 54.

Next Story