search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முல்லை பெரியாறு அணை
    X
    முல்லை பெரியாறு அணை

    தொடர்மழை எதிரொலி- முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 128 அடியை எட்டியது

    வைகை அணையின் நீர்மட்டம் 67.98 அடியாக உள்ளது. 208 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    மேலும் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. கடந்த ஆண்டு பருவமழை கைகொடுத்த நிலையில் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. 152 அடிவரை தண்ணீர் தேக்க தமிழகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் தொடர்ந்து கேரள அரசு அதற்கு முட்டுக்கட்டை போடுகிறது.

    பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. கடந்த வாரம் 125 அடியாக நீர்மட்டம் சரிந்தது. இந்த நிலையில் பெய்த கோடைமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 128.05 அடியாக உள்ளது. 350 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 67.98 அடியாக உள்ளது. 208 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.60 அடியாக உள்ளது. 38 கனஅடி நீர் வருகிற நிலையில் நீர் திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 103.81 அடியாக உள்ளது. 16 கனஅடி நீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பெரியாறு 0.4, தேக்கடி 1, கூடலூர் 2.5, வீரபாண்டி 7, போடி 1.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
    Next Story
    ×