என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டிற்குள் தண்ணீர் புகுந்திருப்பதை படத்தில் காணலாம்.
தமிழகத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில் ஊட்டியில் கொட்டிய கோடை மழை
மசினகுடி பகுதியில் நேற்று காலை முதலே இதமான காலநிலை நிலவியது. மதியத்திற்கு பிறகு வானத்தில் மேகக்கூட்டங்கள் திரண்டு மழை பெய்வது போல காட்சியளித்தன.
ஊட்டி:
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல இடங்களில் தினசரி வெயில் அளவு 100 டிகிரியையும் தாண்டி கொளுத்துகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கோடை வெயிலுக்கு மத்தியில் மலைப்பிரதேசமான நீலகிரியில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
நேற்றும் நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்தது. மசினகுடி பகுதியில் நேற்று காலை முதலே இதமான காலநிலை நிலவியது. மதியத்திற்கு பிறகு வானத்தில் மேகக்கூட்டங்கள் திரண்டு மழை பெய்வது போல காட்சியளித்தன.
சிறிது நேரத்தில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. தொடர்ந்து 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக வாழைத்தோட்டம் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் சாலையோரம் நின்றிருந்த மரம் திடீரென சரிந்து விழுந்தது. அப்பகுதிகளில் உள்ள மின் கம்பிகளும் அறுந்தது.
இதனால் மசினகுடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறை மற்றும் மின்சாரத்துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றினர். இதன் பின்னர் மின் வினியோகம் சீரானது.
இந்த மழையால் வனப்பகுதியில் பசுந்தீவனம் மற்றும் விவசாய நிலங்களில் பயிர்கள் வளர்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இதேபோல் கூடலூர் சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.
ஊட்டியிலும் மாலையில் பலத்த மழை பெய்தது. கமர்சியல் சாலை, லோயர் பஜார், மத்திய பஸ் நிலையம், கூட்செட் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஊட்டி ரெயில்வே மேம்பாலத்தின் கீழும் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி சென்றன.
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தண்ணீரை அகற்ற வியாபாரிகள் சிரமப்பட்டனர்.
கோடை காலத்தை முன்னிட்டு இப்போதே ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தற்போது பெய்து வரும் மழை சுற்றுலா பயணிகள் வருகையை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Next Story