என் மலர்

    தமிழ்நாடு

    ஐ.எஸ்.கெளசுகி
    X
    ஐ.எஸ்.கெளசுகி

    தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கல்லூரி மாணவி வெற்றி - மக்கள் பணிக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என பேட்டி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நாகர்கோவில் மாநகராட்சியில் 17-வது வார்டில் 21வயதான கல்லூரி மாணவி ஐ.எஸ்.கெளசுகி தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சியில் 17-வது வார்டில் 21வயதான கல்லூரி மாணவி ஐ.எஸ்.கெளசுகி தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் 1500 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.கவின் வசந்தாவை விட 641 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    “எங்க வீடு நாகர்கோவில் நெசவாளர் காலனியில் உள்ளது. நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் முடித்து டாக்டர் அம்பேத்கர் பல்கலைகழகத்தில் வக்கீலுக்கு படிக்க விண்ணப்பித்துள்ளேன். எங்கள் குடும்பமே தி.மு.க. குடும்பம்தான். என் அப்பா இளஞ்செழியன் மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளராக இருக்கிறார். அம்மா சரிதா, தங்கை நவீனா. எங்க குடும்பம் அரசியல் குடும்பம் என்பதால் மக்கள் பணி செய்யும் ஆர்வம் எனக்கு இயல்பாகவே இருக்கு. முதன் முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    எங்கள் வார்டில் ரோடு பிரச்சினைதான் பெரிய பிரச்சினையாக உள்ளது. அதை சரி செய்ய முயற்சி எடுப்பேன். எங்கள் பகுதிக்கு முன்பு 54-ம் நம்பர் பஸ் வந்தது இப்போது அந்த பஸ் வரவில்லை. அந்த பஸ்சை மீண்டும் கொண்டு வரவும், தெருவிளக்கு, சாக்கடை வசதி போன்ற வி‌ஷயங்களில் கவனம் செலுத்துவேன். நான் கல்லூரிக்கு படிக்கப் போனாலும் மக்கள் பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×