என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கைப்பற்றப்பட்ட புகையிலை பொருட்களுடன் அவற்றை பறிமுதல் செய்த போலீசார்.
    X
    கைப்பற்றப்பட்ட புகையிலை பொருட்களுடன் அவற்றை பறிமுதல் செய்த போலீசார்.

    சேலம் வழியாக சென்ற ரெயிலில் கடத்தப்பட்ட புகையிலை பொருட்கள்

    சேலம் வழியாக சென்ற ரெயிலில் கடத்தப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    சேலம்:

    ரெயில்களில் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், 

    இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூர் ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் பெங்களூர்- நாகர்கோவில் விரைவு ரயிலில்(17235) எஸ்-4 பெட்டியில் 2 பைகள் கிடந்தது, இதனையடுத்து டிக்கெட் பரிசோதகர் அந்த ரெயிலில் பணியில் இருந்த ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

     தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து வந்து சம்பந்தப்பட்ட 2 பைகளையும் எடுத்து சோதனையிட்ட போது அந்த பையில் 22 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    இதனையடுத்து அதனை கைப்பற்றிய போலீசார்  மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைத்தனர். ரெயிலில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு வந்தவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Next Story
    ×