search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வழக்கு
    X
    வழக்கு

    பொம்மிடி மல்லாபுரம் பேரூராட்சி ஊழியர் மீது தாக்குதல் - முன்னாள் தி.மு.க. துணைத்தலைவர் மீது போலீசில் புகார்

    பொம்மிடி மல்லாபுரம் பேரூராட்சி ஊழியர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக முன்னாள் திமுக துணைத்தலைவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    பாப்பிரெட்டிப்பட்டி:

    தர்மபுரி மாவட்டம், பொம்மிடி ,பொ.மல்லாபுரம் முதல்நிலை பேரூராட்சி உள்ளது. இந்த பேரூராட்சியில் வரி வசூலிப்பவரகாக பணியில் இருப்பவர் ஆறுமுகம் (வயது 45). கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 11-ந் தேதி மதியம் 3 மணி அளவில் அலுவலகத்தில் ஆறுமுகம் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது பொ,மல்லாபுரம் பொம்மிடியை சார்ந்த முன்னாள் பேரூராட்சி தி.மு.க. துணை தலைவர் மோகன் குமார் (45), மற்றும் முன்னாள் தி.மு.க நகர செயலாளர் சேகர் (65) ஆகிய இருவரும் பேரூராட்சியில் உள்ள சில தகவல் பெறுவதற்காக பேரூராட்சி அலுவலகம் சென்று உள்ளனர்.

    அப்போது அங்கு வரி வசூலிப்பவர் ஆறுமுகத்திடம் சில தகவல்களை கேட்டுள்ளனர், அப்போது தங்களுக்கு உரிய மரியாதை தரவில்லை,மேலும் உட்கார நாற்காலி கூட போடவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளையில் செய்துள்ளனர்..

    இதில் ஆத்திரமடைந்த பேரூராட்சி துணைத் தலைவர் மோகன் குமார், பேருராட்சி ஊழியர் ஆறுமுகத்தை தாக்கியதாக தெரிகிறது. உடனே அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் வடிவேலு மற்றும் சக ஊழியர்கள் சென்று சமாதானப்படுத்தி அவர்களை வெளியில் அனுப்பி வைத்துள்ளனர்,

    இச்சம்பவம் நடைபெற்ற போது பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜ் பணி விடுப்பில் இருந்துள்ளார், இச்சம்பவம் குறித்து உடனடியாக பாதிக்கப்பட்ட ஆறுமுகம் செயல் அலுவலருக்கு தகவல் தெரிவித்தார்,

    இது தொடர்பாக பேரூராட்சி ஊழியர் ஆறுமுகம் பொம்மிடி போலீஸ் நிலையத்தி புகார் செய்தார். இந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர், பேரூராட்சி மாவட்ட அதிகாரி, மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி, வட்டாட்சியர் போன்றோருக்கு புகார் மனுவை அனுப்பியுள்ளார்,

    இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×