search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    மஞ்சூரில் 15 மாணவர்களுக்கு கொரோனா தொற்றால் அரசு பள்ளி மூடல்

    மஞ்சூர் காத்தாடிமட்டம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து மற்ற மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
    மஞ்சூர்:

    தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், மஞ்சூர் காத்தாடிமட்டம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து மற்ற மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 14 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர் சுகாதாரத்துறையினர் வகுப்பறை முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர். இதேபோல் மஞ்சூர் மேல்முகாமில் மின்வாரிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து பிக்கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சாய்கிஷோர் தலைமையிலான மருத்துவகுழுவினர் மின்வாரிய ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். முள்ளிமலை, கீழ்குந்தா, உள்பட பல்வேறு பகுதிகளிலும் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

    இதையடுத்து குடியிருப்பு பகுதிகளில் கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளித்து சுகாதார நடவடிக்கைளை தீவிரப்படுத்தினர்.
    Next Story
    ×