என் மலர்
தமிழ்நாடு

திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் கார்டு
திருவள்ளூர் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நாளை சிறப்பு முகாம்
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013-ன் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட உள்ளன.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் எனப்படும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் வட்டாச்சியர் அலுவலகங்களில் நாளை (8-ந் தேதி) நடைபெறுகிறது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013-ன் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட உள்ளன. அதற்கான சிறப்பு முகாம் நாளை காலை 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாச்சியர் அலுவலகங்களிலும் நடக்கிறது.
வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெற உள்ள இந்த முகாமில் திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் குடும்ப அட்டை பெறாத திருநங்கைகள் விண்ணப்பித்து மின்னணு குடும்ப அட்டை பெறலாம்.
இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
Next Story