என் மலர்

  தமிழ்நாடு

  புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம்
  X
  புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம்

  புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் - கடற்கரை சாலையில் மக்கள் கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
  புதுச்சேரி:

  புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டது.  தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஏராளமானோர புதுச்சேரிக்கு படையெடுத்தனர். இதையடுத்து புதுச்சேரி கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. கேக் வெட்டி, ஆடல் பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.

  கடற்கரை சாலையில் பிற்பகல் முதலே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.  கடற்கரை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. சட்டம் ஒழுங்கு போலீஸார், போக்குவரத்து போலீஸார், ஊர்க்காவல் படையினர் என சுமார் 2000 போலீசாருடன்,என்.சி.சி, என்.எஸ்.எஸ். மாணவர்களும் பாதுகாப்பு பாணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  Next Story
  ×