search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.632 குறைந்தது

    தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.632 குறைந்து இருப்பது நடுத்தர, ஏழை மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவி வரும் நிலையில் கடந்த வாரம் பவுன் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது.

    இதற்கிடையே கடந்த 20-ந்தேதி பவுன் ரூ.37 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. நேற்று பவுனுக்கு ரூ.72 குறைந்து ரூ.36 ஆயிரத்து 904-க்கு விற்றது.

    இந்தநிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.632 குறைந்தது.

    ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 272-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.79 குறைந்து ரூ.4 ஆயிரத்து 534ஆக உள்ளது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1,400 குறைந்து ரூ.69 ஆயிரத்து 500ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.50-க்கு விற்கிறது.

    சில நாட்களுக்கு முன்பு தங்கம் விலையில் தொடர்ந்து உயர்வு காணப்பட்டது. பவுன் மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது.

    அதன்பின் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.632 குறைந்து இருப்பது நடுத்தர, ஏழை மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
    Next Story
    ×