என் மலர்

  செய்திகள்

  ரெயில்வே தண்டவாளத்தில் படுத்த வாலிபர் மீட்கப்பட்ட காட்சி.
  X
  ரெயில்வே தண்டவாளத்தில் படுத்த வாலிபர் மீட்கப்பட்ட காட்சி.

  ரெயில் வரும்போது தண்டவாளத்தின் நடுவே படுத்திருந்த போதை வாலிபர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  துடியலூர் அருகே ரெயில் வந்ததும் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் படுத்திருந்ததை கவனித்த ரெயில் என்ஜின் டிரைவர் தொடர்ந்து ஹாரன் அடித்தார்.
  துடியலூர்:

  கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரெயில் நேற்று மாலை வழக்கம் போல கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி புறப்பட்டது. அந்த ரெயில் துடியலூர் அருகே வந்தபோது தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் படுத்திருந்தார். இதை கவனித்த ரெயில் என்ஜின் டிரைவர் தொடர்ந்து ஹாரன் அடித்தார். ஆனாலும் அந்த வாலிபர் எழுந்து செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். இதனால் ரெயில் மெதுவாக சென்று அந்த வாலிபரை தாண்டிச் சென்று நின்றது. ஆனால் அந்த வாலிபர் தண்டவாளத்தில் நேராக படுத்துக் கொண்டதால் ரெயிலுக்கு அடியில் கிடந்தும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.

  ரெயில் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அதில் இருந்து பயணிகள் இறங்கி பார்த்தபோது ரெயிலுக்கு அடியில் தண்டவாளத்தின் நடுவே ஒருவர் படுத்துக் கிடந்தார். எழுந்து வெளியே வருமாறு என்ஜின் டிரைவர் மற்றும் பயணிகள் கூறியும் அவர் வர மறுத்தார்.

  இதைத்தொடர்ந்து பயணிகள், அந்த வாலிபரை வெளியே இழுத்து தண்டவாளத்தின் ஓரமாக போட்டனர். பின்னர் அவரிடம் விசாரித்தபோது சரியாக பதில் அளிக்கவில்லை. மேலும் அவர் குடிபோதையில் தண்டவாளத்தில் படுத்து இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பயணிகள் ஏறியதும் 10 நிமிடம் தாமதமாக ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.


  Next Story
  ×