search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    திட்டக்குடி பேரூராட்சி 18-வது வார்டு கொரோனா அதிகரிப்பால் சீல் வைப்பு

    திட்டக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் சின்னசாமி மற்றும் சுகாதாரத்துறையினர் அந்த பகுதிக்கு சீல் வைத்தனர். மேலும் அந்த பகுதியில் யாரும் செல்லாத வகையில் தென்னங்கீற்று கொண்டு தடுப்பு கட்டைகள் அமைத்து தடுப்பு ஏற்படுத்தினர்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதுடன் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

    இந்தநிலையில் திட்டக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட கோழியூர் 18-வது வார்டு பகுதியில் சிறுவர் முதல் பெரியவர்கள்வரை பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    இதையடுத்து திட்டக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் சின்னசாமி மற்றும் சுகாதாரத்துறையினர் அந்த பகுதிக்கு சீல் வைத்தனர். மேலும் அந்த பகுதியில் யாரும் செல்லாத வகையில் தென்னங்கீற்று கொண்டு தடுப்பு கட்டைகள் அமைத்து தடுப்பு ஏற்படுத்தினர்.

    மேலும் தெருக்கள் முழுவதும் கிருமிநாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் போடப்பட்டன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சுகாதாரத்துறையினர் பொதுமக்கள் அச்சத்தை போக்கும் வகையில் உடனடியாக இப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×